பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.27- பணிபுரியாத துணைவியார் வீட்டில் சும்மா இருப்பதாக கூறுவது சரியல்ல. ஜீவனாம்சத்தை தீர்மானிக்கும்போது, அவரது பங்களிப்பை புறக்கணிப்பது நியாயமல்ல என்று டில்லி உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.

ஜீவனாம்சம்

டில்லியை சேர்ந்த ஒரு வாழ் விணையருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் ஆனது. ஒரு ஆண் குழந்தை பிறந்து 7 வயது ஆன நிலையில், 2020ஆம் ஆண்டு, மனைவியையும், மகனையும் விட்டு கணவர் பிரிந்து சென்றார். இடைக்கால ஜீவனாம்சம் கோரி. மனைவி மாஜிஸ்திரேட்டு நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அப்பெண் நல்ல ஆரோக்கியத்துடனும், நன்றாக படித்து இருந்தும் வேலைக்கு  செல்லாமல் இருந்ததாக கூறி, இடைக்கால ஜீவ னாம்சம் வழங்க மறுத்து விட்டது. மேல்முறையீட்டு கோர்ட்டும் அவருக்கு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை.

மேல்முறையீடு

பின்னர், டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா தீர்ப்பு அளித்தார். குடும்ப வன்முறையில் இருந்து பெண் களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ், அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்ப தாவது:-

ஒரு குடும்பத் தலைவி சும்மா உட்கார்ந்து இருப்பதில்லை. சம்பாதிக் கும் கணவர் திறம்பட செயல்படும் வகையில் அவர் உழைப்பை அளிக்கிறார். குழந்தைகளையும், வீட்டையும் கவனித்துக் கொள்கிறார்.  ஜீவனாம்ச கோரிக்கையை தீர்மா னிக்கும்போது, அவரது பங்களிப்பை கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமல்ல.

 பங்களிப்பு

‘சும்மா இருக்கும் மனைவி’ என்று சொல்வது கட்டுக்கதை. ஒரு மனைவி பணிக்கு செல்லாமல் இருப்பதை சோம்பேறித்தனமாகவோ, வேண்டுமென்றே கணவரை சார்ந்திருப்பதாகவோ கருத முடி யாது. ஜீவனாம்ச கோரிக்கையை தீர்மானிக்கும்போது, சம்பாத்தி யத்தை மட்டுமின்றி, அவர் வீட்டுக்கு ஆற்றிய பங்களிப்பின் பொருளாதார மதிப்பை கணக்கில் கொள்ள வேண்டும்.

பணிபுரியாமல் இருப்பதை சும்மா இருப்பதாக வர்ணிப்பது எளிது. ஆனால், ஒரு குடும்பத்தை தாங்குவதில் அவரது உழைப்பை அங்கீகரிப்பது மிகவும் கடினம். எனவே, ஒரு மனைவியின் பணி புரியாத நிலையை கணவரை வேண்டுமென்றே சார்ந்திருப்பதுடன் சமப்படுத்தும் பார்வையை ஒப்புக் கொள்ள முடியாது. அவருக்கு ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சம் அளிக்க உத்தர விடுகிறோம்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *