பாலியல் தொந்தரவு: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை ஏப். 14- கலாக்ஷேத்ரா வில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மாணவிகளிடம் விசா ரணை மேற் கொண்டனர். 

சென்னை திருவான்மியூ ரில் செயல்பட்டு வரும் கலா ஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவ தாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அடையாறு காவல் துறையினர், பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, மாதவரத்தில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை காவல் துறையினர் கைது செய்தனர். 6 வாரங்களுக்குள்… இந் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியை அடிப் படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணை யம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது. 

இதுகுறித்த விசாரணை அறிக்கையை 6 வாரங்களுக் குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணைய புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டதைய டுத்து, ஆணைய எஸ்.பி. மகேஸ்வரன் தலை மையிலான காவல் அதிகாரி கள் கலாக்ஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச் சந்திரன், துணை இயக் குநர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் உள்ளிட்ட 6 பேரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந் நிலையில் தேர்வு முடிவடைந்த நிலை யில் மாணவிகள், ஆசிரியர்கள் என 30க்கும் மேற்பட்டோ ரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை அறிக் கையை விரைந்து தாக் கல் செய்ய முடிவு செய்திருப்ப தாகவும் ஆணைய வட்டா ரங்கள் தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *