டேராடூன், பிப்.26 உத்தர காண்டில் கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உத்தரகாண்டின் ரேஷம் பாரி பகுதியில் அத்ரியா கோயில் அருகே ஷாஹித் என்பவர் பல நாள்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ரமலான் மாதத்தையொட்டி, கோயிலுக்கு அருகே இருந்த கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தொழுகை செய்தார்.
கோயில் நிலத்தில் ஷாஹித் தொழுகை நடத்தியதையறிந்த சிலர், அவர் மீது தடிகளால் தாக்குதல் நடத்தினர். மேலும், ஷாஹித்தை இந்து மத ஆதரவு முழக்கமிடவும் வற்புறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, ஷாஹித்துடன் முஸ்லிம் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஷாஹித் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பரோலில் வெளிவந்த கொலைக் குற்றவாளி என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இதனிடையே, கோயில் நிலத்தில் வேறு எந்த மதம் தொடர் பான நடவடிக்கைகளும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று கோயில் மேலாளர் அரவிந்த் சர்மா கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இரு சமூகத்தினரையும் அமைதி காக்கு மாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். மேலும், புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
