‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு மறைவு:
இறுதிவரையில் அவர் மரணத்தோடு போராடிக் கொண்டுதான் இருந்தாரே தவிர, மரணம் அவரை எளிதில் வென்றுவிடக் கூடிய அளவில் இல்லை!
கொள்கை, எளிமை, தியாகம் இவற்றின் மொத்தக் கூட்டுத் தொகைக்குப் பெயர்தான் நல்லகண்ணு!
நமக்கெல்லாம் நல்ல பாடமாகவும், வழிகாட்டியாகவும் என்றைக்கும் திகழ்வார்!

 

சென்னை, பிப்.26  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ‘தகைசால் தமிழர்’  நல்லகண்ணு மறைவு: இறுதிவரையில் அவர் மரணத்தோடு போராடிக் கொண்டுதான் இருந்தாரே தவிர, மரணம் அவரை  எளிதில் வென்றுவிடக் கூடிய அளவில் இல்லை! கொள்கை, எளிமை, தியாகம் இவற்றின் மொத்தக் கூட்டுத் தொகைக்குப் பெயர்தான் நல்லகண்ணு! நமக்கெல்லாம் நல்ல பாடமாகவும், வழிகாட்டியாகவும் என்றைக்கும் திகழ்வார்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு அவர்கள் நேற்று (25.2.2026) மதியம் மறைந்துவிட்டார். அவரது மறைவிற்கு குறித்து ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தொலைப்பேசிமூலம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: தோழர் நல்லகண்ணு அவர்களுடைய இழப்பு ஓர்  ஈடு செய்ய முடியாத இழப்பு. ஒரு நூற்றாண்டு காலத்தைக் கடந்தவராக இருக்கிறார். கட்சியோடு சேர்ந்து அவருடைய வாழ்க்கையும் பின்ணிப் பிணைந்து பார்க்கின்ற பல பரிமாணங்கள் இருக்கின்றன. உங்களுடைய இரங்கல் செய்தி என்ன?

தமிழர் தலைவர் ஆசிரியர்: இழக்கக் கூடாத ஒருவரைத் தமிழ்நாட்டுப் பொது வாழ்க்கை இழந்திருக்கின்றது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ‘தகைசால் தமிழர்’
இரா.நல்லகண்ணு படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

ஆவடியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்ட மேடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். உடன்: கழக முக்கிய பொறுப்பாளர்களும், பல்வேறு கட்சியினரும் உள்ளனர். (ஆவடி 25.2.2026)

கொள்கை, எளிமை, தியாகம் இவற்றின் மொத்தக் கூட்டுத் தொகைக்குப் பெயர்தான் நல்லகண்ணு.

அவருடைய அடக்கமும், கொள்கை ஆழமும் போற்றுதலுக்குரியவை.  என்றென்றைக்கும் போராட்டக் களத்தில் இறுதிவரையில் நின்றவருமான அவர், இப்போது வரலாறாகி விட்டார். படமாக மட்டும் இனி தெரியமாட்டார்; பாடமாகவும் அவர் தெரிவார்.

நமக்கெல்லாம் நல்ல பாடமாகவும், வழிகாட்டியாகவும் என்றைக்கும் திகழ்வார்

நல்லகண்ணு என்று சொல்லும்போதே, அவர்கள் நமக்கு செல்லகண்ணு என்று பாட்டாளிகள் அணைத்து வாழக்கூடிய ஒருவரை, நாம் இழக்கக் கூடாத ஒருவரை இழந்திருக்கின்றோம்.

காலம் அவரை என்றைக்கும் போற்றும்! வரலாறாகவே வாழ்வார்!

நல்லகண்ணு அவர்களுக்குப் புரட்சி வணக்கம்!

கடைசி வரையில், அவர் போராளியாகத்தான் திகழ்ந்தார். அவருடைய வயது, அவருடைய உடல்நலத்தைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கடைசி வரையில், எந்த நிகழ்வாக இருந்தாலும், அதில் பங்கேற்று, களப் போராளியாகவே இறுதி மூச்சு அடங்கும் வரையில் இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஓர் அதிசயமான நிகழ்வு – அவர் இறுதிவரை மரணத்தோடு போராடிக் கொண்டுதான் இருந்தாரே தவிர, மரணம்கூட அவரை  எளிதில் வென்றுவிட முடியவில்லை.

வாழ்நாள் போராளியாக இருந்த அவர், இப்போது வரலாறாக ஆகிவிட்டாலும்கூட, நமக்கெல்லாம் நல்ல பாடமாகவும், வழிகாட்டியாகவும் என்றைக்கும் திகழ்வார்.

பொதுவுடைமைக் கொள்கைதனை திசையெட்டும் சேர்ப்பதற்காக உழைத்த அந்த மாவீரருக்குப் புரட்சி வணக்கம்.

அவர் விரும்பிய பொதுவுடைமைச் சமுதாயத்தைச் சமைப்பதில், நாம் அந்தக் கொள்கையோடு இணைந்து போராடுவதுதான், அவருக்கு நாம் காட்டக்கூடிய மிகப்பெரிய நன்றி! மலர்வளையம்!!

தந்தை பெரியாரும், ‘விடுதலை’யும்
தொடர்ந்து அவரை ஆதரித்தவர்கள்!

செய்தியாளர்: சுதந்திரத்திற்கு முன்பு போராட்டக் களத்திற்கு வந்த நல்லகண்ணு, அதற்குப் பிறகு சுதந்திரம் அடையும்போது சிறையில் இருக்கிறார்; அதற்குப் பிறகு பல அரசியல் தலைவர்களோடு பணியாற்றினார்.  பெரியாரோடு, இவருடைய அரசியல் பயணம் எப்படி இருந்தது? அந்த வரலாற்றுப் பக்கங்களைப் பின்னோக்கிப் பார்க்கவேண்டி இருக்கிறது?

தமிழர் தலைவர்: தந்தை பெரியார் அவர்களோடு, நல்லகண்ணு தொடர்ந்து இணைந்து கொண்டிருந்தவர்.  சேலம் சிறையில் நடந்த கொடுமைகள் உள்பட, தந்தை பெரியாரும், ‘விடுதலை’யும் தொடர்ந்து அவரை ஆதரித்தவர்கள். ஆகவேதான், சி்ங்காரவேலர் காலத்திலிருந்து பொதுவுடைமை இயக்கத்துக்குப்பெரியாருடன் இருந்த வரலாற்றை அவர்கள் சொன்னார்கள்.

ஒருமுறை நல்லகண்ணு அவர்கள் என்னிடத்தில்  ஹிரேன் முகர்ஜி அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தை  கொடுத்துவிட்டு ஒரு செய்தியை சொன்னார், ‘‘இந்திய வரலாற்றில் இன்னும் 200 ஆண்டுகளாக நிலைக்கப் போகின்றவர்கள் இரண்டு பேர்கள்தான். ஒருவர் பெரியார், இன்னொருவர் சிங்காரவேலர்’’ என்றார்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தொலைப்பேசியின்மூலம் பேட்டியளித்தார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *