இரட்டை எஞ்சின் அரசின் சாதனை ஒடிசாவில் லஞ்சம் வாங்கியதாகப் பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 லட்சம் சிக்கியது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புவனேசுவர், பிப்.26 ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவு மாகப் பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.4 கோடி சிக்கியது

ஒடிசா மாநிலச் சுரங்கத் துறை துணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் தேவபிரதா மொகந்தி. நிலக்கரி விற்பனைக்கு உரிமம்  பெற்ற ஒரு வர்த்தகரிடம் கடந்த (24.2.2026 அன்று) இவர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் மொகந்தியை கையும் களவுமாகப் பிடித்தனர்.உடனடியாக ஒடிசா தலைநகர் புவனேசுவரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டு அலமாரிகளில் கட்டுக்கட் டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடி பணத்தைச் 24.2.2026 அன்று இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மொகந்தியின் அலுவலக அறை மேசை இழுப்பறையிலிருந்து ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டது. அத்துடன் புவனேசுவரில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீடு களுக்கான ஆவணங்கள் மற்றும் 130 கிராம் தங்கம் ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். ஒடிசாவில் இதுவரை பிடிபட்ட ஊழல் வழக்குகளிலேயே இதுதான் அதிகபட்சத் தொகை என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மொகந்தி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நீர்ப்பாசனத் துறை உதவிப் பொறியாளர் வீட்டில் ரூ.3.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *