பின்னணி என்ன? அஜித் பவார் உயிரிழந்த நாளில் கையெழுத்தான 75 கோப்புகள் மகாராட்டிர அரசியலில் சலசலப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, பிப்.25 மகாராட்டிரா துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்த நாளில், 75 பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் வழங்கும் கோப்புகள் கையெழுத்தானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார்

மகாராட்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலை மையிலான பா.ஜ.க, – சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த அரசில், துணை முதல மைச்சராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், கடந்த மாதம் 28இல் விமான விபத்தில் உயிரிழந்தார்.

அவர், மாநில சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் விபத்தில் மரணமடைந்த நாளில், அவரது துறையில் உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்குவது தொடர்பான 75 கோப் புகள் கையெழுத்தாகி உள்ளன.

மாநிலத்தின் மிகப் பெரிய தலைவர் விபத்தில் பலியாகி பரபரப்பு நிலவிய நேரத்தில், ஒரே நாளில், 75 கோப்புகளில் கையெழுத்திடுவது எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

‘ஒரே நாளில் ஏராள மான கோப்புகள் கையெழுத்தாகியி ருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில ஆய்வு செய்து, உரிய நடைமுறையை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டதா’ என, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையே, கல்வி நிறுவ னங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் பெற்ற சிறுபான்மையினர் நலத்துறை துணை செயலர் மிலிந்த் ஷெனாயை மாநில அரசு பணியிடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.

இது தொடர்பாக விசா ரணை நடத்த அஜித் பவாரின் மனைவியும், துணை முதலமைச் சருமான சுநேத்ரா உத்தர விட்டுள் ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *