திருப்பதி ஏழுமலையான் ‘அவதாரம்’ எடுத்து வந்திருப்பாரோ! தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்தது!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பதி, பிப்.24 தெலங்கானா மாநிலம் பூபால பள்ளியைச் சேர்ந்தவர் மவுனிகா (வயது 27). இவர் கடந்த 22.2.2026 அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகச் சென்றிருந்தார். ரூ.300 தரிசன அனுமதிச் சீட்டில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தார். தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் மோனிகா நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

அப்போது திடீரென வந்த பாம்பு ஒன்று மவு னிகாவின் காலைக் கடித்துவிட்டுச் சென்றது. பாம்பு கடித்ததால் மவுனிகா அலறி துடித்தார். இதனைக் கண்டு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தேவஸ்தான அதிகாரிகள் ஆம்பு லன்ஸ் கொண்டு வந்து மவுனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி யில் உள்ள ரூயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பநட்டது. தற்போது மவுனிகாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது..

மூடநம்பிக்கையால் பறிபோன நகைகள்!

தீய சக்தியை விரட்டுவதாகக் கூறி இளம்பெண்ணிடம் 70 சவரன் நகை மோசடி

சென்னை, பிப்.24 சென்னை கொடுங்கையூர் எவரெடி காலனியைச் சேர்ந்த புஜங்கர் ராம் என்பவர், தனது வீட்டில் பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாகக் கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, வீட்டின் கதவு, பீரோ எதுவும் உடைக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. இதனால் வீட்டில் இருந்த நபர்களே கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், புஜங்கர் ராமின் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் புஜங்கர் ராமின் மகளான அய்ஸ்வர்யா விடம், அவரது தோழி ஜெயசிறீ மூலம் அறிமுகமான சிறீ தீப தர்ஷன் என்பவர், ‘உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கிறது. அதை விரட்ட பூஜைகள் செய்வதற்கு நகைகளைக் கொடுக்க வேண்டும்’ என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக 70 சவரன் நகைகளை மோசடி செய்து சுருட்டியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அரும்பாக்கம் வீணா கார்டன் பகுதியில் வசித்த தீப தர்ஷனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 63 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய ஜெயசிறீ என்ற பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஜோதிடரின் காம வெறியாட்டம்:
சிறுமிகள் வன்கொடுமை

ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சிவகங்கை, பிப்.24 இரண்டு சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் காரைக்குடி ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மான கிரியைச் சேர்ந்த ஜோதிடர் ராமகிருஷ்ணன் (வயது 52). இவர் பரிகார பூஜைகளை செய்து வந்தார். அவரிடம், 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவர், தனது 17 வயது மற்றும் 14 வயது உள்ள 2 மகள்கள் சரியாக படிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

பரிகாரம் செய்தால் இருவரும் நன்றாக படிப்பார்கள் என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதை நம்பி, தனது 2 மகள்களையும் ராம கிருஷ்ணன் வீட்டுக்கு அந்தப் பெண் அழைத்துச் சென்றார். தொடர்ந்து அந்தப் பெண்ணை ஓர் அறையில் இருக்குமாறு கூறிவிட்டு, பரிகார பூஜை செய்வதாகக் கூறி, மற்றொரு அறைக்கு 2 சிறுமிகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதை வெளியில் சொன்னால் உங்களது தாய், தந்தை இறந்து விடுவர் என்று கூறி மிரட்டி யுள்ளார். இதனால் பயத்தில் சிறுமிகள் வெளியில் சொல்லவில்லை. 2 ஆண்டுகளுக்கு பின்பு 2 சிறுமிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஜோதிடர் ராமகிருஷ்ணன் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமிகள் கூறினர்.

இதுகுறித்து சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடர் ராம கிருஷ்ணனுக்கு தலா 100 ஆண்டு கள் வீதம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கும் உத்தரவிட்டார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *