சாமியார்களின் யோக்கியதை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மற்றும் அவரது உதவியாளர் முகுந்தானந்த கிரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய காவல்துறைக்கு சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) உத்தரவிட்டுள்ளது.

தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் குமார் சௌராசியா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கண்ணியத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதோடு, இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்துமாறு காவல்துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த வழக்கை சாகும்பரி பீடாதிஸ்வரர் அசுதோஷ் பிரம்மச்சாரி மகாராஜ் என்பவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார். “குரு சேவை” என்ற பெயரில் சிறுவர்களை அவிமுக்தேஸ்வரானந்தன் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *