டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்திய விவசாயிகளுக்கு எதிரான அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து, ம.பி.யில் காங்கிரஸ் போராட்டம்; ராகுல், கார்கே பங்கேற்கின்றனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கருநாடகாவில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட பாஜக எம்.எல்.ஏ. சந்துருலமானி, கைது; மார்ச் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.
* ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் கேரளாவில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாணவர் அமைப்புகள், மாட்டிறைச்சி விழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
* தெலங்கானா கும்மேராவில் கோவிலில் நுழைய ரூ.100 கட்டணம் செலுத்துவதற்கு ரசீது கேட்ட பட்டியலினப் பெண் மீது வன்முறை; மோதலில் பெண்ணின் கைக்குழந்தை சாவு. கோவில் நிர்வாகிகள் மூன்று பேர் கைது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜே.என்.யு. பல்கலைக்கழக துணை வேந்தரின் ஜாதியவாத கருத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்; யு.ஜி.சியின் சமபங்கு விதிகள் ‘பகுத்தறிவற்றது’ என்றும், பாதிக்கப்பட்டோர் என்ற அடையாளத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற முடியாது என்றும் கூறியதற்கு கடும் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசுப் பணி மற்றும் கல்வியில் 5 சதவீத முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் மகாராட்டிரா அரசின் நடவடிக்கைக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. முஸ்லிம் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
* மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ஏன் நீங்கள் அனுமதிக்கவில்லை? கோயம்புத்தூருக்கு மெட்ரோ எங்கே? எய்ம்ஸ் திட்டம் ஏன் தொடங்கப் படவில்லை? ‘மரணத் தேர்வு’ நீட் தேர்வி;ல் இருந்து நம் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்கள்?” மதுரை வருகையின் போது பிரதமர் மோடியிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி இந்து:
* கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டன: ஒன்றிய அரசின் அறிக்கை வெளியீடு. மூலப்பொருள், வங்கி வட்டி விகிதங்கள் அல்லது மின்சாரச் செலவு காரணமாக பல சிறு அளவிலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக நூற்பு ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
* பாஜக ஆட்சியின் “இரட்டை இயந்திரம்” அரியானாவில் கொடூரமான காட்டுமிராண்டித்தனம்! திரிபுராவைச் சேர்ந்த 19 வயது பெண் குருகிராம் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது லிவ்-இன் பார்ட்னரால் மூன்று நாட்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். பாஜகவின் ஆட்சியில் 2026. சதி பிரதா பாஜக மாநிலங்களில் இன்றும் உள்ளது; அங்கு பெண்கள் இன்னும் எரிக்கப்படுகிறார்கள், கொடூரமாக நடத்தப்படுகிறார்கள், அரியானாவில் 131 கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் உட்பட 1,772 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் சுட்டிக்காட்டியது.
– குடந்தை கருணா
