சென்னை, பிப். 22– தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் பட்டியலில் 7 புதிய பல்கலைக்கழகங்களை சேர்ப்பது தொடர்பான பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் 2023இல் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நிலஅளவு உள்ளிட்டவற்றில் சலுகை வழங்கி 2025இல் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் குறைந்த அளவு நிலம் இருந்தாலே பல்கலைக்கழகம் அமைக்க முடியும் என்று இந்த சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டிருந்ததால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், 20.2.2026 அன்று இந்த சட்ட மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டன.
