
தமிழர் தலைவர் எழுதிய ‘‘பெண்கள் முன்னேற்றத்திற்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?’’ என்ற நூலை கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வெளியிட்டார்.

‘அறிஞர் அண்ணாவின் உயில்’ (கடைசி) கடிதம் என்ற புத்தகத்தை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் அனிச்சம் கனிமொழி வெளியிட்டார்.

சென்னை மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, திராவிடமகளிர் பாசறை சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை சி. வெற்றிச்செல்வி தமிழர் தலைவரிடம் வழங்கினார்.


மூத்த மகளிர் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து தந்தை பெரியார் சிலையை வழங்கிப் பாராட்டினார்
