சமையல் எண்ணெய் மெல்லக் கொல்லும் நஞ்சா? அதிர்ச்சித் தகவல்கள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆரோக்கியமான உணவு முறைக்கு நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் எவ்வளவு முக்கியம் என்பதைப் பெரும்பாலானோர் உணருவதில்லை.

சமீபத்திய ஊட்டச்சத்து ஆய்வுகளின்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் ‘ சமையல் எண்ணெய் வகைகள் உடலில்  உடற்பருமன் மற்றும்  நீண்ட கால நோய்களையும் உண்டாக்கும் “நச்சுப் பொறிகளாக” மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

லினோலிக் அமிலம் (Linoleic Acid) – மறைந்திருக்கும் ஆபத்து

சமையல் எண்ணெய்களில் உள்ள லினோலிக் அமிலம் (LA) எனப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, அது உடலில் ஆக்சிஜனேற்ற வேதி வினையை உருவாக்கி (Oxidative Stress) உருவாக்குகிறது. இது இதயம், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும் காரணியாக அமைகிறது.

விளம்பரங்களின் மூலம் ‘இதயத்திற்கு நல்லது’ எனச் சொல்லப்படும் கீழ்க்கண்ட எண்ணெய்களில் லினோலிக் அமிலம் மிக அதிக அளவில் உள்ளது:

சூரியகாந்தி எண்ணெய்: 68%

சோள எண்ணெய்: 54%

சோயாபீன் மற்றும் பருத்தி விதை எண்ணெய்: 50% மேல்.

தவிட்டு எண்ணெய் (Rice Bran) & கடலை எண்ணெய்: 30% மேல்

இந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது, அவற்றின் மூலக்கூறு அமைப்பு சிதைந்து நச்சுத்தன்மையாக மாறுகின்றன.

உடல் ஆரோக்கியத்தைப் பேண விரும்புவோர், லினோலிக் அமிலம் 1% முதல் 3% வரை மட்டுமே உள்ள இயற்கை கொழுப்பு நிறைந்த மூலங்களுக்கு மாற நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதுவரை நம்மை அச்சுறுத்திக்கொண்டு இருந்த உணவாக பயன்படும் கால்நடை கொழுப்பு (ஆடு மாடு பன்றி) அதாவது கால்நடைகளின் கொழுப்பில் உடலுக்கு தீமை விளைவிக்கும் லினோலிக் அமிலத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது என்பது வியப்பை ஏற்படுத்தும் செய்தியாகும்.

நெய் மற்றும் வெண்ணெய்: பாரம்பரியமான இவை செரிமானத்திற்கும் ஹார்மோன் சமநிலைக்கும் உதவுகின்றன.

தேங்காய் எண்ணெய்: இதிலுள்ள லாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மிதமான வெப்பத்தில் சமைக்கப் பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட (Refined) எண்ணெய்களைத் தவிர்த்து, மரச்செக்கு எண்ணெய்களுக்கும், இயற்கை கொழுப்புகளுக்கும் மாறுவதே நீண்ட கால ஆரோக்கியத்திற்கு ஒரே வழி. இன்று நீங்கள் செய்யும் சிறிய மாற்றம், எதிர்காலப் பெரிய மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க உதவும்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *