ஆரிய மாடல்’ என்றால் என்ன – ‘திராவிட மாடல்’ என்றால் என்ன? தஞ்சை மாநாட்டுக்கு வாரீர்! உரத்துச் சிந்திப்போம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு ஹிந்தி தேர்வு நடைபெற்றது. அத்தேர்வை எழுதிய மாணவர்கள் பெரும்பாலானோர் வெற்று தாள்களை மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளனர்.

சிலர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதியுள்ளனர். பெரும்பாலானோர், ‘‘நான் ஹிந்து, எனக்கு மதிப்பெண் போடவில்லை என்றால், ஹிந்து தர்மத்திற்கு விரோதமானவர்கள் ஆவீர்கள்’’ என்று எழுதி உள்ளனர்.

ஹிந்தித் தேர்வு எழுதிய மாணவர்கள், முதல் பக்கத்தில் தேர்வு பதிவு எண், தனது பெயர், வகுப்பு போன்றவற்றைக் கூட சரியாக எழுதத் தெரியவில்லை. பெரும்பாலான வினாத்தாளில் பெயர் மற்றும் தேர்வு எண் ஒரே கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. அதாவது தேர்வு மய்ய அதிகாரியே இவர்களுக்குப் பெயர் மற்றும் தேர்வு எண்ணை எழுதிக்கொடுத்துள்ளார்.

இதில் ஒரு மாணவன் தந்த வினாத் தாளை தேர்வு மய்ய அதிகாரி சோதனை செய்தபோது, அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்.

முதல் பக்கத்திலேயே பெயர் உள்ள இடத்தில், என்னவென்றே புரியாத மொழியில் அதாவது ‘சங்கேத’ மொழியில் உள்ளது போல் தனது பெயரையே கிறுக்கி வைத்துள்ளார்.

அதன் பிறகு முதல் பக்கத்தில் ‘ஹோய் சிறீராம், ஹோய் ஹனுமான்’ என்று எழுதி உள்ளார். அதாவது, ‘ஜெய் சிறீராம்’ என்பதை ‘ஹோய் சிறீராம்’ என்று எழுதியுள்ளார்.

அடுத்த பக்கத்தில் ‘மன்னிக்கவும்’ என்று கிறுக்கி வைத்து, கீழே அசிங்கமான வார்த்தையை எழுதியுள்ளார். அடுத்த பக்கத்தில், ‘உண்மையான ஹிந்துவாக இருந்தால், எனக்கு முழு மதிப்பெண் கொடு’ என்று எழுதியுள்ளார்.

அதற்கு அடுத்த பக்கத்தில் ‘சிவாஜிக்குப் பிறந்தவர் அக்பர்’ என்று மிகவும் ஆபாசமாக எழுதியதுடன், ‘உண்மையான ஹிந்து 100–க்கு 100 மதிப்பெண் போடுவார்’ என்று எழுதி, அசிங்கமான படம் வரைந்து உள்ளார். கீழே ‘ஹோய் சிறீராம்’ என்று எழுதி உள்ளார்.

அடுத்த பக்கத்தில், 100 ரூபாய் தாளை வைத்து, ‘போதுமா?’ என்று எழுதியுள்ளார்.

மற்றொரு பக்கத்தில், மீண்டும் நூறு ரூபாயை ஒட்டி வைத்து தேர்வு மய்ய பெண் கண்காணிப்பாளர் குறித்து ஆபாசமான சொற்களை எழுதி வைத்துள்ளார்.

கடைசி பக்கத்தில் ‘ஹிந்தி ஆபாச சொற்களை ஆங்கிலத்தில் எழுதி, பெண் பிறப்புறுப்பின் படம் வரைந்துள்ளார்.

நாடு எந்தத் திசையில் செல்லுகிறது?

மாணவர்களின் கல்விக் கண் குருடாக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் சோதனைச் சாலை உத்தரப்பிரதேசம் என்று கூறப்படுவதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் போதாதா?

தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசின் செழுமை யையும், சீர்மையையும் ஒரு பக்கத்தில் எடை போட்டு, இன்னொரு பக்கத்தில் பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) ஆளும் மாநிலங்களின் தரத்தையும் எடை போட்டுப் பார்த்தால், ‘திராவிட மாடலின்’ மாண்பும், மகத்துவமும் நன்றாகவே புரியும்.

‘ஆரிய மாடல்’ என்றால் என்ன? ‘திராவிட மாடல்’ என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வீர்!

தஞ்சை மாநாட்டுக்கு வாரீர், உரத்துச் சிந்திப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *