பா.ஜ.க.வை திருப்திப்படுத்தும் ‘துக்ளக் ஆணையம்’ தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கொல்கத்தா, பிப்.19 தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட கட்சியால் நடத்தப்படும் ‘துக்ளக் ஆணையமாக’ மாறிவிட்டது என செய்தியாளர் சந்திப்பில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தேர்தல் ஆணையத்தால் மேற்குவங்கம் குறிவைக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். வங்காள அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டால், நாங்கள் அவர்களை 100 சதவீதம் பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார்.

“ERO-க்களை இடைநீக்கம் செய்வதற்கான காரணம் என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ERO-க்களிடம், அவர்களின் குற்றம் என்ன, அவர்களின் தவறு என்ன என்று கேட்டீர்களா? என ஏழு உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காரணம் காட்டி, ஜனநாயக உரிமைகளைப் பறித்து, சாதாரண மக்களை பயங்கரவாதிகள் போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழித்து, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டில் தலையிடுகிறார்கள். எந்த நாற்காலியும் நிரந்தரம் அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் பாஜக அய்டி பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை செயற்கை நுண்ணறிவைப் பயன் படுத்தி நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *