பிரிட்டனிலும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளம் பார்க்கத் தடை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லண்டன், பிப்.19  பிரிட்டனில் பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்

‘பேஸ்புக், இஸ்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர்’ உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களால் குழந்தைகளின், மனநலம், உடல் நலம் பாதித்து வருவதாக சமீப காலமாக உலகளவில் கவலை எழுந்துள்ளது. ‘ஆன்லைன்’ அபாயங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

அந்த வகையில் முதல் நாடாக ஆஸ்திரேலியா, பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதித்தது. அய்ரோப்பிய நாடுகளான பிரான்சு, ஸ்பெயினிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது

அந்த வரிசையில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது. நாட்டில் சமூக ஊடகத் தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் துவங்கப்பட்டதாகவும், விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்றும், பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *