ஒடிசாவில் கரடியிடம் சிக்கிய கணவரை துணிச்சலாக போராடி காப்பாற்றிய பெண்..!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கரன்ஜியா, பிப்.19 ஒடிசா மாநிலம் கரன்ஜியாவில் உள்ள மிலு என்ற கிராமத்தில் மால்டே சோரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி லிலி சோரனுடன் சேர்ந்து காட்டில் இலைகள் சேகரிப்பதற்காக சென்றார்.

அடர்ந்த காட்டிற்குள் இலைகள் சேகரித்துக் கொண்டிருக்கும்போது திடீரென 6 கரடிகள் அடங்கிய கூட்டம் அவர்களை சுற்றிக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடன் நின்றனர்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கரடிகளில் ஒன்று மால்டே சோரன் மீது பாய்ந்து கடுமையாக தாக்கியது. கரடிகள் சுற்றி நிற்க, ஒரு கரடி தனது கணவனை கடுமையாக தாக்கிய நிலையில் லிலி சோரன் அஞ்சி ஓடவில்லை. தனது கையில் வைத்திருந்த கோடாரி போன்ற ஆயுதத்தால் துணிச்சலாக தாக்கினார். இதனால் கரடி பயந்து மால்டே சோரனை விட்டு ஓடியது.

பலத்த காயம் அடைந்த மால்டே சோரன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் உயர்சிகிச்சைக்காக கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கரடிக் கூட்டம் மக்களைத் தாக்கி வரும் நிலையில்  துணிச்சலாகக் கணவனை காப்பாற்றிய பெண் பற்றிய செய்தி பரபரப்பாகி வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *