லால்குடி,பிப்.19- “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு நலமான இளைஞர்கள்” என்னும் மய்யக் கருத்தைக் கொண்டு நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக 15.02.2026 அன்று காலை 9 மணியளவில் நொச்சியம், மாதவ பெருமாள் கோயில் விஜயா நகரில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களின் வழிகாட்டுதலில் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பத்மநாபன் மற்றும் கவுன்சிலர் கோபி ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையின் மேனாள் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மரு. ஆ.கனகராஜ் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மரு. ஆர்.முனவர் சுல்தானா ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 25 ஆண்கள் மற்றும் 45 பெண்கள் என மொத்தம் 70 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம் மருத்துவ முகாமில் செவிலியர்கள் காமாட்சி, ஹேமமாலினி மற்றும் செவிலிய உதவியாளர் சுல்தான் பீவி ஆகியோர் பொதுமக்களுக்கு உடல் எடை, இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டனர். மருத்துவப் பயனாளிகளுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பளித்திட்ட அலுவலர் பேரா. ஜெசிமா பேகம், பேரா ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி, பேரா. தினேஷ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருந்து மாத்திரைகளை வழங்கி முகாமினை ஒருங்கிணைத்தனர்.
திராவிடர் கழக காப்பாளர் ப.ஆல்பர்ட், முழு உறுதுணை யுடனும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் பிச்சை மணி, நகர செயலாளர் பாலசந்தர் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்புடனும் இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியன் இல்லத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
