தஞ்சை மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கோபி கழக மாவட்டத்தின் சார்பில் இரண்டு தனிப் பேருந்துகளில் பங்கேற்க முடிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கோபி, பிப். 19-  கோபிச்செட்டிப் பாளையம் கழக சார்பில் மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் இல்லத்தில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  15.02.2026 நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம் தொடக்க உரை ஆற்றினார். பெரியார் பெருந்தொண்டர் பெ. இராஜமாணிக்கம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ப. குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மா.சூர்யா நன்றியுரை கூறினார்.

இக்கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் விஜயசங்கர், லட்சுமணன்,  செந்தில்குமார், கந்த சாமி, பழனிசாமி, மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர் ப.திலகவதி, மகளிரணி பூங்கொடி, சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் நாகராஜ், கோபி ஒன்றிய செயலாளர் கே.எம். சிவக்குமார்,  மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல்,  மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் இரா.கார்த்திக், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் க.திவ்யா, மாவட்ட மகளிர் பாசறை துணைத் தலைவர் சி.மதிவதனி, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் சி.அறிவுச்செல்வி,  இளைஞரணித் தோழர்கள் சுரேஷ், பிரபாகரன், கார்த்திக், சதுமுகை பழனிசாமி பெரியார் பிஞ்சு பகுத்தறிவு, திராவிட புரட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரை ஆற்றினார்கள் .

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

எதிர்வரும் 21.02.2026 தஞ்சையில் நடைபெறும் மகளிரணி, இளைஞ ரணி, மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு கோபி கழக மாவட்டத் தின் சார்பில் இரண்டு தனிப் பேருந்துகளில் பங்கேற்பதென முடிவு செய்யப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *