புதுடில்லி, ஏப். 15- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் பணிகளை பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார்.
இதற்காக டில்லியில் முகாமிட் டிருந்த அவர் 12.4.2023 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். பின்னர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செய லாளர் டி.ராஜா ஆகியோரை தனித் தனியாக சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய சீதாராம் யெச்சூரி, ‘எதிர்க்கட்சி களின் ஒற்றுமைக்கான முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன. எதிர்க்கட்சி கூட்டணியில் மாநில அளவில் தொகுதி பங்கீடு நடைபெறும்’ எனக் கூறினார்.