மாத்தூர், பிப். 18- 15.2.2026 அன்று காலை 11மணிக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் செஞ்சி மாத்தூரில் உற்சாகம் பொங்க நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் சே.வ. கோபன்னா தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர் துரை.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அறிவுலகப்பேராசான் தந்தைபெரியாரின் இலட்சியத்தை உலகமயமாக்குவதற்கு அருந் தொண்டாற்றிவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி களப்பணி ஆற்ற வேண்டிய அவசியத்தை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில இணைச்செயலாளர் மு.இளமாறன் தஞ்சை மாநாட்டிற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொண்டு செயலாக்கவுரை வழங் கினார். காப்பாளர் கொ.பூங்கான், மாவட்ட துணைச்செயலாளர் ஏ.இரமேசு, மாவட்ட மகளிரணித் தலைவர் வெ.கீதாகோபன்னா, கோ.மோட்டூர் கி.ஏழுமலை, விழுப்புரம் நகரத்தலைவர் இரு.இராசேந்திரன், சு.கவுதமன், கோலியனூர் ஒன்றிய செயலாளர் சு.மாறன், கொடுக்கன்குப்பம் இர.தவமணி, செக்கடிக்குப்பம் இரா.மூர்த்தி, பகுத்தறிவுப் பாடகர் நா.காத்தவராயன், செஞ்சி தா.நந்தகுமார், வே.இரகுநாதன், சென்னகுணம் இரா.அன்பரசு,பல.கார்த்திகேயன்,தொழிலதிபர் க.அறிவுடைநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தீர்மானங்கள்
பிப்ரவரி 21இல் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழக, இளைஞரணி மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என தீர்மானிக் கப்பட்டது.
மார்ச் 10ஆம் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கூட்டங்கள் அனைத்து ஒன்றியங்களிலும் எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
வருகைதந்த அனைவருக்கும் மதிய உணவு அளித்து சிறப்பித்த மேனாள் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் இணையர், சாதி கலைத்தோர்சங்கத்தலைவர் ஜாக்குலின் அவர்களுக்கு பயனாடை போர்த்திநன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்று கருத்துரை வழங்கிய ஆயிரக்கணக்கான இளை ஞர்களுக்கு காவலர் பயிற்சியளித்து பணிகிடைக்க உழைத்திடும் நிலா அறக்கட்டளை நிறுவனர் பெ.பாரதிக்கு சிறப்புசெய்யப்பட்டது.
நிறைவாக கெடார் ந.கதிரவன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
