எழுச்சிமிகு தஞ்சாவூர் மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்டக் கழக சார்பில் குடும்பம் குடும்பாக பங்கேற்று சரித்திரம் படைப்போம்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பத்தூர், பிப். 17–  திருப்பத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, மாவட்ட திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 15.02.2026 அன்று காலை 11.00 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு கே. சி. எழிலரசன் (மாவட்டக் கழகத் தலைவர்) தலைமை வகித்தார்.

அன்பு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) கடவுள் மறுப்பு உறுதிமொழி முழங்கினார்.

மோ. நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) வரவேற்றார்.

பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) நிகழ்ச்சியை ஒருகி ணைத்து கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்) கருத்துரையாற்றினார்.

இக் கூட்டத்தில் பங்கேற்று மாநாட்டு பயண ஏற்பாடு, பங்கேற்பு குறித்து  சி. தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்) சி. எ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)   காளிதாஸ் (நகர தலைவர்) எம். ஞானம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) ஏ. டி. சித்தாரத்தன் (மாவட்ட துணைச் செயலாளர்) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி) தாமரை (நகர காப்பாளர் மகளிரணி)நா. சுப்புலட்சுமி, வே. அன்பு (மாவட்டத்தலைவர் ப. க), பெ. ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்), கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப. க.) கே. மோகன் (மாவட்ட தலைவர் பெ. கட்டுமான தொழிலாளரணி), மு. வெற்றி (மாதனூர் ஒன்றியத் தலைவர்) சே.வெங்கடேசன் (மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கோ. சங்கர்  (சுந்தரம்பள்ளி கிளைத் தலைவர்) சரவணன் (லக்கிநாயக்கன்பட்டி கிளைத்தலைவர்)லட்சுமணன்(லக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்) பிரபாகரன் (கற்பிபயிலகம்) தர்ஷனி (மகளிரணி) ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துப் பேசினார்கள்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் களை நிறைவேற்றப்பட்டன

தஞ்சையில் 21.02.2026 அன்று நடைபெறும் இரு பெரும் மாநாட்டிலும், பேரணியிலும் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் அனைத்து அமைப்புகள் சார்பாக குடும்பம் குடும்பமாக வாகனங்களில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது என்றும், மாவட்ட கழக அலுவலக மேல் தளத்தில் ஏழை குழந்தைகள் இலவசமாக பயில பெரியார் பயிலகம் விரைவில் துவங்கப்படும் என்றும், தந்தைபெரியார் அமைப்புச்சார கட்டுமான தொழிலாளரணி பதிவு அலுவலகம் விரைவில் துவங்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தஞ்சை மாநாட்டில் தீர்மானங்கள் கொண்டுவர, கழக அமைப்பு களிடமிருந்து தீர்மானங்கள் வரவேற்கப்படும் என்று தலைமை கழகம் வலிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட

மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் கீழ்கண்ட தீர்மானங்களை முன் மொழிந்தனர்.

சமூக சமத்துவத்தை பேண ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருப்பதை போல, கால போக்கில் இச் சமுகத்தில் ஜாதி என்ற இழிவை ஒழிக்கும் விதமாக, ஜாதி மறுப்பு கலந்த சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளபவர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதியை அடிப்படையாக கொண்டு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை முடிந்தால் தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். இது ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளுவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும், ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இவை அமையும்.

.இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பெரும்பான்மையாக பணிக்கு செல்லுகிறார்கள். அப்படி பணிக்கு செல்லும் பெண்களுக்கு மட்டும் கூடுதலாக சமையல் செய்யும் பணி அவர்களுக்கு உள்ளது. அதன் பொருட்டு பெண்களின் சமையல் செய்யும் சுமையை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஆண்களுக்கும் சமையல் கற்றுத்தரவேண்டும். இதை உயர்நிலைபள்ளி, மேல் நிலைப் பள்ளிகளிலிருந்து ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் இயல்பாக ஆண்களும் சமையல் செய்யும் நிலை உருவாகும். ஆண், பெண் சமத்துவத்துவத்திற்கு மேலும் இது வலுச்சேர்க்கும். இந்த இரண்டு தீர்மானங்களை மாநாட்டில் முன்மொழிந்து,திராவிடமாடல் 2.0 அரசாங்கத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இக் கூட்டத்தில் பங்கேற்று மாநாட்டு பயணச் செலவிற்காக தாமரை (மாவட்ட மகளிரணி காப்பாளர்) ரூ. 2000யும், கற்பகவல்லி (மாவட்ட மகளிரணித் தலைவர்) ரூ. 1000 வழங்னர்.

இறுதியாக மோ. வசீகரன் மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *