சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்களிடையே பதற்றம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப். 16- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக் கங்கள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் நம்ச்சி பகுதியில் நேற்று (15.2.2026) மதியம் 1.09 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மய்யம் (NCS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது பூமியின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்தது. இது 27.40 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.38 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (15.2.2026) இரவு 8.50 மணியளவில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சாங்லாங் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மய்யத்தின் தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கி.மீ. ஆழத்தில், 27.32 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 96.12 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் மய்யம் கொண்டிருந்தது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களி னாலும் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டடச் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒரே நாளில் இரண்டு வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *