செங்கல்பட்டு மாவட்ட தி.க. – ப.க. கலந்துரையாடல் பிப். 21 தஞ்சை மாநாட்டிற்குத் தனிப் பேருந்தில் பெருந்திரளாகப் பங்கேற்க முடிவு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுராந்தகம், பிப்.16  செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகத்தில் உள்ள அறிவுக்கடல் தையலகத்தில், 14.2.2026  அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பியன் தலைமை வகிக்க, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார் கடவுள் மறுப்பு கூற, கழக மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்பு உரையுடன், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சே. சகாயராஜ் ஒருங்கிணைப்புரையுடன் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கி யது.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தமது கருத்து ரையில், கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை சிறப்பாக நடத்தியதுபோல், பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள கழக இளைஞரணி, மாணவர் கழக, மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை மாநாட்டிலும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில்,  திராவிடர் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாய் கலந்துகொண்டு இந்த மாநாட்டின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு ஏதுவாக தனி வாகனத்தில் மாநாட்டிற்கு சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.

பங்கேற்றோர்

கலந்துரையாடல் கூட்டத்தில் அ.பா.கருணாகரன், பொது குழு உறுப்பினர், மு.பிச்சைமுத்து, ப.க மாவட்ட துணைத் செயலாளர், சமத்துவமணி மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றம், முடியரசன்  மறைமலைநகர் நகர தி.க செயலாளர், மறைமலைநகர் மு.அறிவு, மறைமலைநகர் தோழர் ஏழுமலை, மதுராந்தகம் நகர மகளிர் அணி பொறுப்பாளர் நிர்மலா செல்வம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

நிறைவாக மதுராந்தகம் நகர செயலாளர் ஏ.செல்வம் நன்றி கூறி னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *