நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்த மோதல் மக்களவைத் தலைவரைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கத் தீர்மானம்! எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப். 16- நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 14.2.2026 அன்றுடன் (நிறைவடைந்த நிலையில், ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி இடையேயான அரசியல் மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு எதிராக ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீர்மான அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது கடும் அமளி ஏற்பட்டது. இதன் விளைவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்பாக, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியைத் தாக்கத் திட்டமிட்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான அறிவிக்கையை வழங்கின.

இந்தச் சூழலில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இதற்கு ‘இந்தியா’ கூட்டணியின் மற்ற கட்சிகளும் கொள்கை அளவில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. மக்களவைத் தலைவருக்கு எதிரான அறிவிக்கையில் கையெழுத்திடாத திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல் ஆணையர் விவகாரத்தில் முன்னிலை வகிக்கிறது.

அதே வேளையில், மக்களவைத் தலைவர் விவகாரத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

“மக்களவைத் தலைவர் மற்றும் தேர்தல் ஆணையர் என இரு முக்கிய அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதால், வரும் மார்ச் 9ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட அமர்வில் அனல் பறக்கும் விவாதங்களும் மோதல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *