மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், காப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிப்ரவரி-21 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, மாநில மாநாடு,

மாலை 3.30 மணிக்கு தஞ்சை புதுஆற்றுப்பாலம் தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில் புறப்படும் திராவிடர் எழுச்சிப் பேரணி,

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெறும் திராவிடர்கழகஇளைஞரணி,திராவிட மாணவர் கழக மாநில மாநாடு ஆகியன மிக எழுச்சியுடன் நடைபெற உள்ளன.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா  எம்.பி. அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்கள்

தங்கள் மாவட்டத்தின் சார்பில் தனிப் பேருந்து ஏற்பாடு செய்து அனைத்து தோழர்களும் குடும்ப குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்திட கனிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!

அன்புடன்

இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *