புதுடில்லி, பிப்.14 கடந்த இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து இருபத்து அய்ந்து வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக எட்டாயிரத்து அறுநூற்று முப்பத்து ஒன்பது புகார்கள் வந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது
இது தொடர்பாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கடந்த இரண்டாயிரத்து பதினாறு முதல் இரண்டாயிரத்து இருபத்து அய்ந்து வரை பணியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக எட்டாயிரத்து அறுநூற்று முப்பத்து ஒன்பது புகார்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு, ஆயிரத்து நூற்று எழுபது புகார்களை தலைமை நீதிபதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை நீதித்துறை கையாண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு எதிரான புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தான் வழங்க முடியும். அதேபோல், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாரை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கலாம்.
