இரட்டை என்ஜின் யோக்கியதை இதுதான்! மணிப்பூரில் நீடிக்கும் கலவரம்: வீடுகளுக்கு தீவைப்பு -இணைய சேவை துண்டிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இம்பால், பிப்.13 மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர் களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த ஓராண்டாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. கடந்த 4-ஆம் தேதி முதலமைச்சர் கெம்சந்த் சிங் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. அப்போது குகி மற்றும் நாகா இனத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை முதல மைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து குகி இனத் தவர்கள் கடுமையாக போராட் டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக நாகா இனத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றுமுன்தினம் (11.2.2026) மணிப்பூரில் கலவரம் உச்சமடைந்தது. அங்குள்ள குகி இனத்தவர்கள் அதிகம் வாழும் உக்ரூல் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகள். அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் வன்மு றையை கட்டுப் படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *