பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் சொந்த கட்சி அமைச்சரையே விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாட்னா, பிப். 13–– பிரபல நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான மைதிலி தாகூர், 10.2.2026 அன்று சட்டப்பேரவையில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மங்கல் பாண்டேவை மைதிலி தாகூர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதாவது தனது தொகுதியான அலிநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் மோசமான நிலைக்குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கட்டடம் மோசமான நிலையில் இல்லை என்றும், பழுதுபார்ப்பு மட்டுமே தேவை என்றும் பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மைதிலி சட்டப்பேரவையில்,

“அமைச்சரின் பதிலில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. ஏனெனில், ‘கட்டடம் மோசமான நிலையில், சிறிய பழுதுவேலைலகள் மட்டுமே இருப்பதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நானே சென்று கட்டடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.

அங்கே ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு இப்போது மருத்துவர் யாரும் இல்லை, கடந்த காலத்தில் அங்கு இரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது இல்லை. நான் மிகவும் சிறிய வயதிலிருந்தே சுகாதார அமைச்சரைப் பார்த்து வருகிறேன். அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதை நான் கவனித்து வருகிறேன். எனவே, இது மிகவும் முக்கியமானது என்பதால், அவர் பொதுமக்களின் நலனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அய்ந்து முதல் ஏழு பஞ்சாயத்துகள் இந்த மருத்துவமனையைச் சார்ந்துள்ளன. இந்த மருத்துவமனையிலிருந்து 40,000 முதல் 50,000 பேர் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனை எனது முழு தொகுதியின் மய்யப்பகுதியில் அமைந்துள்ளது, இதன் மூலம் கன்ஷ்யாம்பூர் மற்றும் அலினகர் ஆகிய இரண்டு கிளைகளும் பயனடைய முடியும்” என தெரிவித்தார்.

தனது சொந்தக் கட்சியின் அமைச்சரையே சட்டப்பேரவையில் விமர்சித்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் மைதிலி தாகூரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *