தஞ்சை மாநாட்டு ஏற்பாடுகளை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பார்வையிட்டார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சை, பிப். 13- பிப்ரவரி21 தஞ்சையில் நடைபெறும் திரா விடர் கழக மகளிர் அணி-திராவிட மகளிர் பாசறை-கழக இளைஞரணி -திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு-பேரணி ஏற்பாட்டுப் பணிகளை 8.2.2026 அன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் மற்றும் திலகர் திடல், ஊர்வலம் நடைபெறும் பாதை ஆகியவற்றை பார்வையிட்டு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆய்வு செய்து கழக பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா‌செந்தூரப்பாண்டியன், தஞ்சை மாநகர தலைவர் செ.தமிழ்ச் செல்வன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர்.பொன்னரசு பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், தஞ்சை மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், தஞ்சை புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் வெ‌.துரை, தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை கணேசன், இபி காலனி பகுதி செயலாளர் இரா.பரந்தாமன், பகுத்தறிவாளர்கழக பொறுப்பாளர் ஏழுமலை, பேராசிரியர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று மாநாட்டுப் பணிகள் குறித்து திட்டமிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *