ஜோதிடத்தின் பெயரால் பாலியல் அத்துமீறல் : ஓட்டம் பிடித்த கயவாளி கைது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், பிப்.12 கேரளாவின் கொல்லம் – புத்தூரில் “பூஜை” என்ற பெயரில் 16 வயது சிறுமியை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அத்துமீறியதாக முராரி தந்திரி என அழைக்கப்படும் ராஜன் பாபு என்ற பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கொல் லத்தை அடுத்த அரிக்கல் பகு தியைச் சேர்ந்தவர் முராரி தந்த்ரி என்ற ராஜன் பாபு. இவருக்கு 54 வயது ஆகிறது. பிரபல ஜோதிடர். இவரிடம் ஜோதிடம் பார்க்க சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அவரது ஜோதிட நிலையத்துக்கு வருவது வழக்கம் சம்பவத்தன்று கொல்லம் புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் ராஜன் பாபுவிடம் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், மாந்திரிகத்தின் மூலம் பேயை ஓட்டலாம் என்று கூறினார். இதை நம்பிய அந்த பெண் நேற்று முன்தினம் தனது மகளை ஜோதிடர் ராஜன் பாபுவின் ஜோதிட நிலையத் துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் அத்துமீறல்

இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை மட்டும் ஜோதிடர் தனி அறைக்குள் அழைத்து சென்றுள்ளார். ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த சிறுமி வெளியே வராததால் சிறுமியின் தாய் அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கிறார். அப்போது அந்த சிறுமி அழுதபடி வெளியே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த அந்த பெண் மகளிடம் என்னவென்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுமி தன்னை பாலியல் ரீதியாக ஜோதிடர் அத்துமீற முயன்றதாக கூறினார். இதுபற்றிய தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஜோதிட நிலையத்தை முற்றுகையிட்டனர். உடனே ஜோதிடர் ராஜன்பாபு ஜோதிட நிலையத்தின் பின் புறம் வழியாக தப்பி ஓடி தலைமறை வாகி உள்ளார்.

ராஜன்பாபு அறைக்குள் சென்று பார்த்தபோது அது படுக்கை அறைபோல காணப் பட்டது. ரத்தக் கறைகள் காணப் பட்டன.

இதுகுறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன்பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பரணிக்காவு கோவிலில் வைத்து ராஜன்பாபுவை காவல்துறையினர் போக்சோ பிரிவில் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *