பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்களவைத் தலைவரை பதவி நீக்க தாக்கீது மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல்; 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு ஆதரவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.12 அவையை நடத்துவதில் அப்பட்டமான பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், காங்கிரஸ் எம்பிக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் கூறி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான தாக்கீதை சமர்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்காத விவகாரம் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை எதிர்த்து கேள்வி கேட்ட 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாகவே அவையில் எதிர்க்கட்சியினரை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசவே அனுமதிப்பதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மான தாக்கீது கொண்டு வர மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று முன்தினம் (10.2.2026) முடிவு செய்யப்பட்டது. இதற்காக தீர்மான தாக்கீல் எதிர்க்கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பாக மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், தலைமை கொறடா கே.சுரேஷ், கொறடா முகமது ஜாவேத் ஆகியோர் அரசியலமைப்புச் சட்டத்தின் 94சி பிரிவின் கீழ்   ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்திற்கான தாக்கீதை மக்களவை பொதுச் செயலாளர் உத்பல் குமார் சிங்கிடம் நேற்று (11.22026) காலை சமர்ப்பித்தனர். இந்த தாக்கீதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, இடதுசாரிகள், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

 

இப்படிச் செய்தால்
எரிவாயு உருளை வெடிக்கும்..

எரிவாயு உருளைகளை எப்போதும் தரையில் சாய்த்து வைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அதிலுள்ள எரிவாயு கசிந்து, பெரும் விபத்து ஏற்படக்கூடும். எனவே, எரிவாயு உருளையை எப்போதும் நிமிர்த்தி வையுங்கள். இப்படிச் செய்வதால் உள்ளே அதீத அழுத்தத்தில் இருக்கும் எரிவாயு கசியாமல் இருக்கும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *