(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
தூய்மையாளரான(?!) அண்ணாமலைக்கு பகுத்தறிவுவாதியின் கேள்விகள்!
“எங்களப்பன் குதிருக்குள் இல்லை!”
அரசியலில் சாமானியன் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. சாமானியனுக்கு இருக்கும் பிரச்சினை எனக்கும் இருக்கிறது. அரசியல்வாதியாக மாதத்துக்கு எனக்கு பல லட்சம் செலவாகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை மாநில தலைவராக எனக்கு சாதாரணமாக செலவாகிறது.
என்னுடைய சம்பாத்தியத்தில் இதனை சரிகட்டமுடியாது. என்னை சுற்றிலும் இருக்கும் நண்பர்கள் மற்றும் கட்சியினர் உதவியால் சமாளித்து வருகிறேன். காருக்கான டீசல் கட்சி கொடுக்கிறது. பாதுகாப்பு அதிகரித்தப்பிறகு, பாதுகாப்பு படையினர் உடன் இருப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக பெரிய வீடு வாடகைக்கு எடுத்துள் ளேன். அந்த வாடகையை ஒரு நண்பர் கொடுக்கிறார். முதல் தலைமுறை அரசியல்வாதிக்கு இருக்கும் பிரச்சினையை பல நல்ல உள்ளங்களால்தான் எனது அரசியல் வாழ்க்கையை நகர்த்த முடிகிறது.
நான் பயன்படுத்தும் கார் ஒரு நண்பர் பெயரில் இருக்கிறது. எனது 3 தனி உதவியாளர்களுக்கும் என் உடன் படித்த கம்பெனி நடத்தும் நண்பர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள். என்னை சுற்றிலும் இருக்கும் நல்ல நண்பர்களின் உதவியோடு எனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.
– செய்தியாளர்களிடம் அண்ணாமலை
நன்றி: “தினத்தந்தி”, 15.4.2023
சாமானியன் அண்ணாமலை அவர்களே,
14.4.2023 அன்று தாங்கள் செய்தியாளர் களுக்கு முன் அவிழ்த்துக் கொட்டிய அடிப் படையற்ற பல தகவல்கள் பற்றி, பாதிக்கப்பட்ட தி.மு.க. உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளுக்கு இனி ஏறி இறங்கும் பல வாய்ப்புகள் உங்க ளுக்குக் கிடைக்கும். அதற்குரிய வகையில் பாதிக்கப்பட்ட வர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண் டிய பொறுப்பு உங் களுக்கு உண்டு.
ஆனால், நீங்கள் உங்களைப் பற்றிய சில செய்திகளை அல்லது தகவல்களை யாரும் கேட்காமலேயே சொல்லியிருக்கிறீர்களே, அந்த தகவல்களை பக்கத்தில் வெளியிட் டுள்ளோம்.
அதற்கு நேராக அதில் ஏற்படும் பல அறிவார்ந்த கேள்விகளுக்கு மக்கள் மன்றத் திற்குப் பதில் அளிக்க வேண்டிய கடமையும் உண்டே உங்களுக்கு.
சாமான்ய அண்ணாமலையாருக்கு மாதம் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் செலவாகிறது.
என்னுடைய சம்பளத்தில் இதனை சரிக்கட்ட முடியாது. ஓய்வுபெற்ற போலீஸ் அய்.பி.எஸ் அதிகாரி தாங்கள், இப்போது எப்படி ‘சம்பாதிக்க’ முடியும்? ஓய்வு பென்ஷ னைத்தான் ஒரு வேளை சம்பாத்தியம் என்று வாய்த் தவறுதலாகக் கூறுகிறீர்களோ என்னவோ?
சுமார் ரூ. 7 அல்லது ரூ. 8 லட்சம் எனக்கு செலவாகிறது!
பாதுகாப்புப் படையினர் உடன் இருக்க வசதியாக பெரிய வீடு வாடகைக்கு எடுத்துள் ளேன். வாடகையை ஒரு நண்பர் கொடுக்கிறார் என்கிறீர்கள். இதிலிருந்து எழும் சில கேள்வி கள் – அந்த நண்பர் யார்?
அவர் உங்களுக்குத் தொடர்ந்து உதவிட என்ன காரணம்? அவர் உங்கள் குடும்ப உறவுக்காரரா?
உங்களுக்கு உதவிடும் வகையில் அவரிடம் பொருளாதார வருமானம் பெரும் அளவில் உள்ளதா?
உங்களுக்கான அந்த உதவித் தொகை – அவர் விவரம் சரிவர (Source) சொல்லா விட்டால், அது உங்கள் வருமானமாகத்தானே பொதுவாக வருமானவரி சட்டத்தின்படி வரவு வைக்கப்படும்.
தொடர்ந்து உதவிட உங்களுக்கு சொந்த பந்தமா? வேறு என்ன பிரதிபிரயோஜனம்? (Quid Pro Quo) அவருக்கு?
நீங்கள் பயன்படுத்தும் கார் ஒரு நண்பர் பெயரில் உள்ளது என்கிறீர்கள்?
அப்படியானால் இந்த தகவல்களுக்கும் விளக்கம் அறிய மேலே கேட்கப்பட்ட கேள்வி கள் எழுவதை எவரே தடுக்க முடியும்?
“எனது மூன்று உதவியாளர்களுக்கும் எனது உடன் படித்த கம்பெனி நடத்தும் நண்பர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள்.
அவர்கள் ஏன் உங்கள் உதவியாளர்களுக் கும் சம்பளம் கொடுக்க முன்வர வேண்டும்?
எவ்வளவு சம்பளம் மாதாமாதம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தருகிறீர்கள்? அப்படியானால் அது கணக்கில் வந்துள்ளதா? அவர்களது வரவு – செலவில் இடம் பெற்றுள்ளதா?
“என்னைச் சுற்றிலும் இருக்கும் நல்ல நண்பர்களின் உதவியோடு என் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது” என்று பீடிகை போட்டு பிறகு ‘ரபேல் வாட்ச்’க்கு வருகிறார்! அந்த நண்பர்கள் உள்நாடா? வெளிநாடா? – விளக்க வேண்டும்? மேலே அவர் கொடுத்த தனது அன்றாட வரவு, செலவு கணக்கில் வெளிப்படைத்தன்மை (Transparency) இருக்கிறதா?
வெளிப்படைத்தன்மையும் இல்லை. அவரது கூற்று நம்பத் தகுந்ததாகவும் இல்லை!
மாதத்திற்கு ரூ.7 லட்சம் செலவு என்றாலும் ஆண்டுக்கு 7 ஙீ 12=84 லட்சம் ரூபாய். இத்தனை லட்சம் ரூபாய்கள் செலவும் வருமானவரி கணக்கில் அவரவர் கணக்கில் இடம் பெற்றுள்ளதா? இல்லை. ‘உபயம்‘ தானா? என்ற பகுத்தறிவுவாதிகளுக்கு பதில் கூற முன்வருவீர்களா?
உங்களுக்குத் தொடர்ந்து உதவி உங்கள் செலவைத் தாங்களே ஏற்கும் அந்த நண்பர்களுடன் உங்களுக்கு நெருக்கம் – உறவுத் தன்மையை வெளிப்படையாக்கி முழு விவரம் தர மறுத்தால் அவர்களது உதவி, வருமானவரி சட்டப்படி unexplained income in the hands of Mr.Annamalai என்று தானே ஆகும்?
உங்களது வருமானவரி Filing Returns வெளியிட்டு உங்களது ‘தூய யோவானை’ காட்டு வீர்களா?