* “தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபாடிக் கழகம்” சார்பில் நடைபெற்ற பெண்கள் அணியின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு தமிழர் தலைவர், மேனாள் அமைச்சர்
ஆர்.வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் பூண்டி து.கிருஷ்ணசாமி (வாண்டையார்), பெரியார் வீர விளையாட்டு கழகத்தின் மாநிலச் செயலாளர் ராமகிருட்டிணன் ஆகியோர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.
* போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைக்கு விழா குழுவின் சார்பில் தமிழர் தலைவர் மோதிரம் பரிசாக அளித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
![]()

“தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபாடிக் கழகம்” சார்பில் நடைபெற்ற அகில இந்திய ‘A’ கிரேடு கபாடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாம் பரிசு தலா 2 லட்சமும், மூன்றாம் பரிசு
1 லட்சமும், நான்கு சிறப்புப் பரிசுகள் தலா 1 லட்சம் பரிசுகளை விழா குழுவின் சார்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் வழங்கினர். உடன்: திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், உரத்தநாடு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், ஒரத்தநாடு ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் க.அறிவரசு, சிங்கப்பூர் சக்திவேல், பேபி குழுமத்தினுடைய நிறுவனர் தொழிலதிபர் மா.சத்யன், புலவன்காடு தொழிலதிபர் உ.துரைமுருகன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.பாண்டியன், ஒக்கநாடு மேலையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அ.சண்முகம், அரசு மருத்துவர் வெற்றிவேல், தொழிலதிபர் எஸ்.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் கிசோர் முத்துராமலிங்கம்.
