நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சியினரின் கேள்விக்குப் பதிலளிக்க அஞ்சி இரண்டு நாள் பயணமாக மலேசிய சென்ற மோடியை, ”விடாது கருப்பு” போல் அங்கும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடியுடன், ‘‘மோடியே திரும்பிப்போ” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதில் தந்தை பெரியாரின் ”கைத்தடி” மோடியை விரட்டுவது போன்ற பதாகையை மலேசியர் ஒருவர் பிடித்து நிற்கும் காட்சி வெளியாகி உள்ளது.
மலேசியாவில் ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பரவுதை அனுமதிக்க மாட்டோம்!

ஹிந்து – முஸ்லீம் மலேசிய மக்கள் – தமிழர்கள் ஒன்றாக வாழும் மலேசியாவில், ‘‘ஹிந்துத்துவ வேடம் பூண்டு வரும் மோடியே, வெளியேறு’’ என்ற மலாய் மொழி முழக்கத்தைத் தமிழிலும் பதாகைகளாக ஏந்தியிருந்தனர்.
