தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 11- கொத்தடிமை தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை, தியாகராயர் நகரில் தொழிலாளார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல், 944 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.2 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *