திருச்சி, பிப். 11- தஞ்சையில் பிப்.21 இல் நடைபெறவுள்ள மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் மாநில மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்பது என்று திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள லால்குடி, பெரம்பலூர், அரியலூர், துறையூர், மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில், நேற்று (பிப்.9) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் பாசறை துணைச் செயலாளர் க.அம்பிகா வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் சே.வசந்தி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ரூபியா ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விக்னேகுமார், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு,துணைத் தலைவர் இரா.சின்னசாமி, அரியலூர் மாவட்டம் வீரா.திராவிட முத்து, தில்லைநகர் பகுதி தலைவர் பா.சுல்தான் பாஷா, ஜெயில்பேட்டை அமுதா குணசேரகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சங்கிலிமுத்து, பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியம் சின்னதுரை, திருவரங்கம் திருநாவுக்கரசு, வாழவந்தான்கோட்டை விசயராகவன், அல்லித்துறை தவமணி, தில்லைநகர் பேபி, சோமரசன்பேட்டை ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானம்:
தஞ்சையில் பிப்.21இல் நடைபெறவுள்ள மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்பது என்றும் மாநில மாநாட்டை விளக்கி உடனடியாக போர்க்கால அடிப்படையில் சுவரெழுத்து, விளம்பரப் பதாகைகள், உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இரங்கல் – தீர்மானம்: திருச்சி ஜெயில்பேட்டை பகுதி செயலாளர் குணாவின் சகோதரர் வீரபாண்டியன், மகளிரணித் தோழர் ரேவதியின் தாயார் சரோஜா, மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர் சித்தார்த்தன், பெரியார் பேரூரையாளர் பேரா.சக்குபாய் நெடுஞ்செழியன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
