அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சே.பசும்பொன் பாண்டியனின் தாயார் மறைவு குறித்து கழகத்தின் சார்பாக இரங்கலைத் தெரிவிக்க திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மதுரை பல்லவன் நகர் இல்லம் சென்று பசும்பொன் பாண்டியனைச் சந்தித்தார். பசும்பொன் பாண்டியன் தமது பழைய நினைவுகளையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு 40 ஆண்டுகளுக்கு முன் தாம் கலந்து கொண்ட போராட்டம், பரப்புரை நிகழ்ச்சி, இராமேசுவரத்தில் நடைபெற்ற மாநாடு குறித்த செய்திகளை பொதுச் செயலாளரிடம் பகிர்ந்து கொண்டார். சே.பசும்பொன்பாண்டியனின் தாயார் மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து விடைபெற்றார்.
