மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல் பா.ஜ.க. தலைவரின் குடும்பத்தில் அய்ந்து பேரில் நான்கு பேர் தோல்வி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, பிப். 10- மகாராட்டிரா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நேற்று (9.2.2026) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பார்பானி மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் வார் புட்கரின் குடும்பத்தினர் 5 பேர் போட்டியிட்டனர்.
வார்புட்கரின் மகள் சோனால் தேஷ்முக்த், மகன் சம்ஷேர் வார் புட்கர், மருமகள் ப்ரேர்னா வார்புட்கர், மருமகன் உத்கார்ஷ் வார்புட்கர், அஜித் வார்புட்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் அஜித் வார் புட்கர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் பாஜக சார்பில் போட்டி யிட்ட உத்கார்ஷ் வார் புட்கரை 111 வாக்குகள் வித் தியாசத்தில் வீழ்த்தினார்.
சோனால் தேஷ்முக்த் சிவ சேனா (UBT) சார்பில் போட்டியிட்டார். இவர் திலிப் தேஷ்முக்த்-யிடம் 2674 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விய டைந்தார்.
சம்ஷேர் வார்புட்கர் சிவ சேனா (UBT) வேட் பாளர் பாண்டுரங் கில்லாரேயிடம் 1,604 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மருமகள் பிரேர்னா 2,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
சுரேஷ் வார்புட்கர் மகாரா;lடிரா முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் பா.ஜ.க.-வில் கடந்த ஆண்டு இணைந்தார். 2008 முதல் 2009 வரை விவசாயத்துறை அமைச் சராக இருந்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *