10 முக்கிய நாடுகளின் ஜி.டி.பி. கடன் விகிதம் இந்தியா 81 சதவீதம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெனீவா, பிப். 10- 10 முக்கிய நாடுகளின் ஜிடிபி  கடன் விகிதம் வளர்ந்த நாடாக இருந்தாலும் வளரும் நாடாக இருந் தாலும் பல்வேறு வகைகளில் கடன் வாங்குகின்றன. கடன் பெறுவதற்கு ஒவ்வொரு நாடும் ஒரு அளவுகோல் வைத்துள்ளது. அதாவது தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவ்வளவு சதவீதம் கடன் வாங்கலாம் என ஒரு கணக்கு உள்ளது. உதாரணமாக இந்தியா ஜிடிபி மதிப்பில் 81 சதவீதம் கடன் பெற்றுள்ளது..

இந்தியாவின்
கடன் விகிதம்

உலகின் முன்னணி நாடுகளின் பொருளாதார நிலை மற்றும் அவற்றின் கடன் வாங்கும் திறன் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பன்னாட்டு நாணய நிதியம் (அய்எம்எப்) வழங்கிய தரவுகளின் அடிப்படையில், நாடு களின் கடன் மற்றும் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதப்  பட்டியலில் ஜப்பான் 227 சதவீதம் கடன் விகிதத்துடன் உலகிலேயே அதிக கடன் சுமை கொண்ட நாடாகத் திகழ்கிறது. இந்தியாவின் கடன் விகிதம் 81 சதவீதம் ஆக உள்ளது.

வளர்ந்த நாடுகள்

சிங்கப்பூர் (176%), இத்தாலி (138%) மற்றும் அமெரிக்கா (129%) ஆகிய நாடுகள் மிக அதிக கடன் விகிதத்தைக் கொண் டுள்ளன.

குறைந்த கடன் விகிதம்

இந்தப் பட்டியலில் ஜெர்மனி 66% விகிதத் துடன் மிகவும் கட் டுக்கோப்பான பொரு ளாதாரக் கொள்கையைக் கொண்ட நாடாகத் தெரிகிறது.

வரிசைப் பட்டியல்: நாடு கடன் விகிதம்

ஜப்பான் 227%, சிங்கப்பூர் 176%, இத்தாலி 138%, அமெரிக்கா 129%, பிரான்ஸ் 120%, இங்கிலாந்து 105%, ஸ்பெயின் 99%, இந்தியா 81%, இஸ்ரேல் 70%, ஜெர்மனி 66%

குறிப்பு

ஒரு நாட்டின் கடன் விகிதம் அதிகமாக இருப்பது எப்போதும் அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதைக் குறிக்காது. மாறாக, அந்த நாடு முதலீடுகளுக்காகவும் வளர்ச்சித் திட்டங்களுக் காகவும் எவ்வளவு கடன் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *