மதக் கலவரத்தைத் தூண்டுகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, பிப். 10- வங்கதேசத்தின் 1.25 கோடி இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக போராட முடிவு செய்தால் அவர்களுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள இந்துக்கள் நிச்சயம் உதவு வார்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அடுத்தடுத்து தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மாண வர்கள் என பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த நாடு முழுவதும் இந்த போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் வங்கதேசத்தில் நெருக்கடி நிலையில் இந்துக்கள் குறித்து மும்பையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் அதன் தலைவர் மோகன் பாகவத் கூறிய தாவது:

“வங்கதேசத்தில் சுமார் 1.25 கோடி இந்துக்கள் உள்ளனர். அவர்கள் அங்கு இருக்கவும், தங்கள் உரிமைக்காக போராடவும் முடிவு செய்தால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அவர்களுக்கு உதவுவார்கள்.

இந்திய நாட்டில் மக்கள் தொகை சார்ந்த விவகாரத்தில் அரசு இப்போது கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சி வெற்றி பெறும். இந்தியா பலம் வாய்ந்தது. ஆர்எஸ்எஸ் நிதி குறித்து அறிய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாங்கள் எங்கள் உறுப் பினர்களிடம் இருந்து நிதி பெறுகிறோம். நாங்கள் விடுதிகளில் தங்கு வதில்லை, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் வீடு களில் தங்குகிறோம்.

எந்த சமூகத்தை சேர்ந்தவரும் ஆர்எஸ்எஸ் தலைவர் ஆகலாம். நாங்கள் அனைத்து சமூக மக்களுக்காகவும் பணியாற்றி வருகி றோம். சமூகத்தை ஒன்றி ணைப்பதுதான் எங்கள் நோக்கம்” என அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *