மும்பை, பிப்.10– மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி (ஜில்லா பரிஷத்) தேர்தலின் போது, வேட்பாளரான தனது தந்தையுடன் வந்த 14 வயது சிறுவன் ஒருவன், வாக்கு செலுத்துவது போன்ற காட்சிப் பதிவு வைரலாகிப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்லூஜ் பகுதியில் உள்ள யஷ்வந்த் நகர் வாக்குச் சாவடியில் 7.2.2026 அன்று மாவட்ட ஊராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வேட்பாளர் அர்ஜுன் சின் மோஹிதே பாட்டீல் தனது மகனை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றதும், அந்த சிறுவன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இவிஎம் (EVM) பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்துவதும் அந்த காட்சிப் பதிவில் பதிவாகியுள்ளது.
