மதவெறியின் மறுபெயரே பா.ஜ.க. முஸ்லிம்களை சுட குறிவைக்கும் அசாம் முதலமைச்சர் அசாம் பா.ஜ.க. பகிர்ந்த காட்சிப் பதிவுக்கு கடும் கண்டனம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திஸ்பூர், பிப்.10 முஸ்லிம்களை துப்பாக்கியால் சுடுவதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா குறிவைப்பதைப்போல அம்மாநில பா.ஜ.க. பகிர்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) காட்சிப் பதிவுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வங்கதேசத்திற்கு மன்னிப்பு இல்லை என்றும், வெளிநாட்டினர் இல்லாத அசாம் எனவும் குறிப்பிட்டு இந்த காட்சிப் பதிவை அசாம் பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பின்னர் அந்த காட்சிப் பதிவை நீக்கிவிட்டு அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை மட்டும் அம்மாநில பா.ஜ.க. பகிர்ந் துள்ளது.

அசாம் பாஜக பகிர்ந்திருந்த காட்சிப் பதிவில் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா இருவரைக் குறிவைப்பதைப் போன்று இருந்தது. அவர்கள் இருவரும் தொப்பி மற்றும் தாடியுடன் இருந்தனர்.

அந்த காட்சிப் பதிவில் வெளி நாட்டினர் இல்லாத அசாம். இனி, இரக்கம் இல்லை. ஏன் நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை? வங்கதேசத்தினருக்கு மன்னிப்பு இல்லை என்பன போன்ற வாசகங் களும் இடம்பெற்றிருந்தன.

இந்த காட்சிப் பதிவுக்்கு எதிர்க் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரி கையாளர்கள் என பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து அந்த காட்சிப் பதிவை அசாம் மாநில பாஜக நீக்கியுள்ளது.

பாஜக பகிர்ந்த காட்சிப் பதிவுக்கு கண்டனம் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சகாரிகா கோஷ், இது மிகவும் வெட்கக் கேடான செயல் எனக் குறிப்பிட்டார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *