அரசுக் குடியிருப்புகளுக்குத் தீ வைப்பு மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர் இதுதான் பிஜேபி இரட்டை எஞ்சின் ஆட்சியின் லட்சணம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இம்பால், பிப்.10 மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (9.2.2026) ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ஆம் தேதி பதவியேற்றது. எனினும் மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

மீண்டும் வன்முறை

இந்நிலையில் மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் லிட்டன் பஜார் பகுதியில் நேற்று முன்தினம் (8.2.2026) இரவு வன்முறை வெடித்தது. இதில் பல வீடுகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. இதையடுத்து அருகருகே உள்ள லிட்டன், மாங்கோட் கிராமங்களில் டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினர் இடையே நேற்று (9.2.2026) மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 25 வீடுகளும் 4 அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன.

வன்முறை மோதல்களை தொடர்ந்து பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குகி சமூகத்தை சேர்ந்த சைக்கூல் சட்டமன்ற உறுப்பினர் கிம்னியோ ஹாவ்கிப், டாங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்த உக்ருல் சட்டமன்ற உறுப்பினர் ராம் முய்வா ஆகிய இருவரும்  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *