டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து பிப் 12இல் நடைபெறும் போராட்டத்தில் தொண்டர்களும், மக்களும் கலந்து கொள்ள திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் அழைப்பு.
* தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களுக்கான.. முழுமையான நிதியை விடுவித்திடுக! மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்: செயல் திறனற்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது தவறானது: ஒன்றிய அரசின் கொள்கைக்கு அதிருப்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எங்களை கேள்வி கேட்க முடியாது: பிரதமர் அலுவலகம் (PMO), பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) தொடர்பான நாடாளுமன்றக் கேள்விகளும் விவகாரங்களும் மக்களவையில் அலுவல் நடத்தும் விதிகள் தொடர்பான விதிகளின் கீழ் அனுமதிக்கப்படாது என்று மக்களவைச் செயலகத்திடம் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முஸ்லிம்களை அசாம் பாஜக முதலமைச்சர் சுட்டுக் கொல்வது போன்ற சர்ச்சை காட்சிப் பதிவு: தற்போது நீக்கப்பட்ட அந்த காட்சிப் பதிவு, “மிக அருகில் சுடு” என்ற தலைப்புடன் பதிவிடப்பட்டது. இதில் முதலமைச்சர் துப்பாக்கிச் சூடு நடத்தும் உண்மையான காட்சிகளும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களின் படங்களும் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
தி இந்து:
* பார்வைச் சவால் கொண்ட பெண் நீதிபதி: தகுதி பட்டியலில் முதலிடம் பிடித்த பார்வைச் சவால் கொண்ட பெண் கேரளாவில் நீதிபதியாகிறார். கேரளாவின் நீதித்துறை வரலாற்றில் முதல் பார்வை சவால் கொண்ட பெண் நீதிபதியாக பதிவாகவுள்ளார்.
* சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படு வதை உறுதி செய்ய, “பாசிஸ்டுகளையும் அவர் களின் அடிமைகளையும் தோற்கடிக்க வேண்டும்” சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (டிஎம்எம்கே) மாணவர் அணியின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
தி டெலிகிராப்:
* இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவசாயத் துறைக்கு ஒருதலைப்பட்சமான அடி என்று கூறி எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் கண்டனம். வரிக்குறைப்புகள், அமெரிக்க மானியங்களை குறிப்பிட்டு, பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்திற்கு முன்பு பரந்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மெரிட் மோசடி: நீட்-பிஜி கட்-ஆப்: ஒற்றை இலக்க மதிப்பெண்களுடன் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை இடங்கள் கிடைத்துள்ளன. ரோத்தக்கில் உள்ள ஒரு அரசு நிறுவனத்தில் எம்.எஸ். எலும்பியல் துறைக்கான இடம், 800-க்கு வெறும் 4 மதிப்பெண்கள் பெற்ற ஒரு விண்ணப்பதாரருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், டில்லியில் உள்ள ஒரு முன்னணி மருத்துவக் கல்லூரியில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவுக்கான இடம் 44 மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொது அறுவை சிகிச்சைக்கான ஒரு இடம் 47 மதிப் பெண்களில் நிரப்பப்பட்டுள்ளது.
– குடந்தை கருணா
