சமூகநீதிக்குச் சாவு மணியா? பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியா

புதுடில்லி, ஜன.8 தகுதியானவர்கள் இல்லை என்று கூறி மண்ணின் மைந்தர்க ளுக்கான வேலையை தட்டிப்பறிக்கும் சூழ்ச்சி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடக்கிறது

தகுதியானவர்கள் ஒருவர்கூட இல்லையா? அலகாபாத் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனப் பட்டியலில் அதிர்ச்சி!

பிரயாக்ராஜ்: இந்தியாவின் பழை மையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலைக்கழகம் (University of Allahabad), அண்மையில் பல்வேறு துறைகளுக்கான பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசி ரியர் பணி நியமனப் பட்டியலை வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்களில் “NFS” (None Found Suitable) அதாவது ‘‘தகுதியான நபர்கள் எவரும் காணப்படவில்லை’’ எனக் குறிப்பிட்டு அந்த இடத்தை நிரப்பாமல் வைத்துள்ளது.

வணிகவியல் துறை  பேராசிரியர் (ஓ.பி.சி.), இணைப் பேராசிரியர் (ஓ.பி.சி.) மற்றும் உதவிப் பேராசிரியர் (எஸ்.சி.) ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை எனப் பட்டியல் கூறுகிறது.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினப் பிரிவினரில், பேராசிரியராகப் பணி யாற்றுவதற்கு தகுதியுள்ள ஒரு பட்டதாரி கூடவா இந்தியா முழுவதும் கிடைக்கவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வித் தகுதி:  பிஎச்.டி. முடித்து, நெட் தேர்ச்சி பெற்று, பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், ‘தகுதியானவர்கள் இல்லை’ என்று கூறுவது திட்ட மிட்டு இடஒதுக்கீட்டைப் புறக்க ணிக்கும் செயல் எனச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

‘‘உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடஒதுக்கீடு பணியிடங்களை நிரப்பா மல், தகுதியைக் காரணம் காட்டி அவற்றை காலியாக வைப்பது சமூக நீதிக்கு எதிரானது’’ எனப் பட்டதாரிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசின் கீழ் வரும் ஜம்மு பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு இதர பிற்படுத்தப்பட்டவருக்கான இடத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்று நிரப்பாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *