இது ஒரு தினமலர் செய்தி ஆர்.எஸ்.எஸ். அதிரடி முடிவு ; உதறலில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.8 தேர்தலில் தொடர் தோல்வி அடைந்தும், மீண்டும் போட்டியிடத் துடிக்கும் பா.ஜ.க., நிர்வாகிகளுக்கு வேட்டு வைக்கும் முடிவை, ஆர்.எஸ்.எஸ்., மேலிடம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, பா.ஜ.க., டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்களவை சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளராக குறிப்பிட்ட சிலருக்கு தான், மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு பெரும் செலவை, டில்லி மேலிடம் செய்கிறது.

தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும், பா.ஜ.க. வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் பொருளாதாரமும் பல மடங்கு உயர்கிறது. கட்சியை வளர்ப்பதை விட, அவர்கள் தங்களை வளர்ப்பதிலேயே அதீத கவனம் செலுத்துகின்றனர். அனைத்திற்கும் மேலாக, குறிப்பிட்ட சிலரே கட்சியின் முகமாக மாறுவது, இது சித்தாந்த வளர்ச்சிக்கு நல்லதல்ல.

அதேபோல், பிரபலமான வர்கள் என்ற பொய்த் தோற்றத்தால் அடுத்தகட்ட நிர்வாகிகளுக்கு, கடைசி வரை வாய்ப்பு கிடைப்பதில்லை. இப்போது, வாரிசு அரசியலும் தமிழ்நாடு பா.ஜ.க.,வுக்குள் தலை தூக்கியுள்ளது. எனவே, தமிழ் நாடு பா.ஜ.க., வில் நடக்கும் கூத்துகளை, விரிவான அறிக் கையாக ஆர்.எஸ்.எஸ்., மேலிடத் துக்கு, கட்சி நலன் விரும்பிகள் அளித்துள்ளனர்.

இதனால், வரும் தேர்த லிலேயே இப்பிரச்சினைக்கு முற் றுப்புள்ளி வைக்க முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக, இம்மாதம் மூன்றாம் வாரம், ஆர்.எஸ்.எஸ்., முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம், சென் னையில் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில், தமிழ்நாடு பா.ஜ.க.  வேட்பாளர்கள் குறித்து, அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் முடிவை, பா.ஜ.க., மேலிடம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த தகவல், கட்சிக்குள் வேகமாக பரவி வருவதால், பிரபலமானவர்கள் என்ற போர்வைக்குள் வலம் வரு வோரும், தேர்தல் கனவில் உள்ள வாரிசுகளும் உதறலில் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறினர்.

– ‘தினமலர்’, 7.2.2026 , பக்.10

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *