கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.2.2026

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பாஜக அணிக்கு மக்கள் மரண அடி தருவார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

* பிப்.17இல் இடைக்கால பட்ஜெட்: தமிழக அரசின் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்.17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

* நாங்கள் திராவிட மாடல் என்கிற சிங்கிள் இன்ஜினை வைத்துக்கொண்டே, ஏற்கனவே டபுள் டிஜிட் வளர்ச்சியை எட்டிவிட்டோம். நீங்கள் சொல்லும் டபுள் இன்ஜின் என்னும் டப்பா இன்ஜினை வைத்துக்கொண்டு பீகார், உ.பி போன்ற மாநிலங்கள் இன்னும் 6% வளர்ச்சியை கூட எட்டவில்லை.” விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இது எப்படி ஒரு கொண்டாட்டத்திற்குரிய செய்தி? இந்திய – அமெரிக்க வர்த்தகம் ஒப்பந்தம் அல்ல; வெறும் கட்டமைப்பு மட்டுமே. இது அமெரிக்காவுக்கே அதிக சாதகத்தை அளிப்பதாக அமைந்துள்ளதென காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்.

* ‘ஹவ்டி மோடியை வென்றது நமஸ்தே டிரம்ப் ’: இந்தியா-அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு குறித்து பிரதமர் மோடி மீது காங்கிரஸின் தாக்குதல்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சுகாதாரக் காரணங்களுக்காக பதவி விலகினாலும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது: 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள், விதி 23-யை சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

தி இந்து:

* ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ‘ஜீரோ’ பாஜகவுக்கு தேர்தலில் அதே ஜீரோவை தருவோம்: விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேச உரை

* கோயிலுக்குள் பாதிரியார்கள் சென்றதில் தவறில்லை; ஆச்சார விதிமீறல் நடந்ததாக கூறி மனு தாக்கலை நிராகரித்து, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.

* விவசாயத்திற்கு எதிரான இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தை கைவிட பிரதமர் மோடிக்கு விவசாயிகள் அமைப்பு வலியுறுத்தல், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை. மக்கள் விரோத மோடி அரசுக்கு ஒரு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், பிப்ரவரி 12 அன்று நடைபெறும் போராட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறும், தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறும் தலைவர்கள் விவசாயிகளுக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) தலைவர்கள் அழைப்பு.

* 31 ஆண்டு பழைய வழக்கில் பீகார் சுயேச்சை எம்பி பப்பு யாதவ் கைது, பழிவாங்கல் நடவடிக்கை என ராகுல் கண்டனம்.

தி டெலிகிராப்:

* தனியார் உயர்கல்வி சேர்க்கைகளில் இட ஒதுக்கீட்டை மாநிலங்களே நிறைவேற்றட்டும்,  நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மசும்தார் பதில். “தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கான ஏற்பாட்டை ஒன்றிய அரசு அரசியலமைப்பில் உருவாக்கியுள்ளது. ஆனால், பல நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பதாலும், அவர்களின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த அரசு விரும்பாததாலும், இந்த பொறுப்பை மாநில அரசுகளிடம் தள்ளிவிடுகிறது,” என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி

டைம்ஸ் ஆப் இந்தியா:

* உயர் நீதித்துறையில் இடஒதுக்கீடு கோரி திமுக எம்.பி. வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்: இந்தியாவின் உயர் நீதித்துறை நாட்டின் சமூக பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று வாதிட்டு, இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில் நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு கோரி, திமுக எம்.பி. பி.வில்சன் மாநிலங்களவையில் ஒரு தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *