நாடாளுமன்ற விதிகளை மதிப்பதில்லை பா.ஜ.க. அரசு தங்கள் விருப்பம்போல் செயல்படுகிறது திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.7- எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே சில முக்கிய பிரச்சினைகளை எழுப்ப விரும்பினார். எதிர்க்கட்சி தலைவர் கார்கேவின் கருத்துகளை கேட்ட பிறகு, பிரதமர் மோடி உரையை தொடங்கி இருக்கலாம். பிரதமருக்கு உள்ள முக்கியத்துவம் எதிர்க்கட்சி தலைவருக்கும் இருக்கிறது என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். பாஜக ஆட்சி பணக்காரர்களுக்கானது; ஏழைகளுக்காக எந்த திட்டங்களும் இல்லை.

அதானி, அம்பானி போன்றவர் களுக்கு நிலங்களையும், திட்டங்களையும் வாரி வழங்குகின்றனர். அவதூறுகளை வாரி வீசுவது ஆளும்கட்சியினர்தான்; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்ல. பிரதமரை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்க திட்டமிட்டனர் என ஒருவர் எப்படி அனுமானித்து கூற முடியும்? நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கானதாக மாறி விட்டது; எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு பதில் சொல்லும் தன்மை ஆளும்கட்சியினரிடம் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நியாயமான கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதிலளிப்பது இல்லை.

நாடாளுமன்றத்தை மதிக்காமல் ஆளும் பாஜக அரசு தங்கள் விருப்பம் போல செயல்படுகிறது. ஆளும் கட்சியினர் பேசுவதை கேட்டு தலையாட்டுவது எங்கள் வேலை அல்ல. நாடாளுமன்ற விதிகளையும் மதிப்பதில்லை; எங்கள் குரலையும் ஒன்றிய அரசு கேட்பது இல்லை. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துகளை கேட்க பிரதமர் மோடி தயாராக இல்லை. நாங்கள் எங்களது கருத்துகளை தொடர்ந்து தெரிவிக்க முயன்றோம்; ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *