காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிப்.13-இல் கூடுகிறது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.7 காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 47ஆவது கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அந்த கூட்டத்தில் கருநாடகாவுக்கு ஆணையிட்டது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 48 ஆவது கூட்டம் டில்லியில் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத் தின் கூட்டம், அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தலைமையில் டில்லியில் உள்ள அந்த ஆணையத்தின் அலுவலகத்தில் பிப். 13 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கருநாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தகவல் அனுப்பியுள்ளது.

காவிரியில் இருந்து மாதாந்திர நீா் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட உள்ளது

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கருநாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடா்பான விவ காரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என கடந்த ஆண்டு 2025 நவம்பா் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *