மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 16 தொழிலாளர்கள் பலி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஷில்லாங், பிப்.6  மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) கடந்த 2014-இல் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்களை காரணம் காட்டி மேகாலயாவில் ‘எலி வளை’ நிலக்கரிச் சுரங்கம் மற்றும் பிற அறிவியலுக்குப் புறம்பான சுரங்க முறைகளுக்கு தடை விதித்தது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *